தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

இந்தாண்டு தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள்

இந்தாண்டு தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
curfew extension in tamil nadu

curfew extension in tamil nadu

தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். நவம்பர்.1ம் தேதி இப்பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், "சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

தென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Advertisment
Advertisements

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: