தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் விழாவைக் கொண்டாட வசதியாக, 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், எந்த இடங்களில் இருந்து எந்த ஊர்களுக்கு பேருந்து இயக்கப்படும் என்பதை போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகங்களில் இருந்து மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மக்கள் பேருந்துகளில் நெரிசல் இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், பொங்கல் பண்டிகையின்போது, வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோயம்பேட்டிலிருந்து இ.சி.ஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“