இந்த ஆண்டு சுதந்திர தினம் வியாழக்கிழமை வருகிறது. சுதந்திர தினம் அன்று பொது விடுமுறை என்பதால், அடுத்து வெள்ளிக்கிழமை ஒரு நாள்தான் வேலை நாள், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சில நிறுவனங்கள், வெள்ளிக்கிழமையையும் விடுமுறையாக அறிவிக்கிறார்கள். அப்படி விடுமுறை அறிவிக்காவிட்டாலும், பலரும் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். இதனால், சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து பெரிய அளவில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆகஸ்ட் 14, 16, 17 தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கன்னி, பெங்களூரு, நாகை, ஒசூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேட்டிலிருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி 70 பேருந்துகளும் ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
[“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“