கார்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் பேருந்துகள் இயக்க உள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், தமிழ்நாடு போக்குவரத்துதுறை 2,700 வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகளை 3 நாட்கள் இயக்க உள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை முதல் திங்கள்கிழமை வரை இயக்கப்பட உள்ளது. 7,000 முறை இந்த பேருந்துகள் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று, திரும்பும்.
இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கும் திட்டத்தில், புதிதாக 9 தற்காலிக பேருந்து நிறுத்தம் வழித்தடத்தில் உருவாக்க உள்ளனர். அண்ணா ஆர்ட்ச் வேலூர் சாலை, அவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, வேட்டவலம் சாலை. திருக்கோயிலூர் சாலை, மணலூர்ப்பேட்டை சாலை, செந்தமிழன் நகர், சென்கம் மற்றும் காஞ்சி சாலை உள்ளிட்ட 9 தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்பட உள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்ல வசதியாக 40 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் மக்கள் கோவில் வரை செல்லலாம். இதற்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“