scorecardresearch

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்: தடை கேட்ட நெல்லை வக்கீலுக்கு ஐகோர்ட் அபராதம்

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை கட்டாயப்படுத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

tamil nadu schools

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லையை சேர்ந்த பெரிய ராஜா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த பிரச்னைக்காக மாணவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில், வழக்கறிஞர் எப்படி இதனை பொதுநல மனுவாக தாக்கல் செய்தார் என்று கேள்வி எழுப்பினார்கள்.

மேலும், இது உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட மனு போல் தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து, அதனை பள்ளி கழிவறை பராமரிப்பிற்கு செலவிட உத்தரவிட்டு, இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Special classes for 10th 12th students case madurai high court

Best of Express