/indian-express-tamil/media/media_files/PcMuNC1WUdOga4k6mXgZ.jpg)
திருச்சி மாவட்டத்தின் முன்னாள் சிறுசேமிப்பு பிரிவு உதவி இயக்குநரும் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளருமான திலகமணி என்பவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தின் முன்னாள் சிறுசேமிப்பு பிரிவு உதவி இயக்குநரும் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளருமான திலகமணி என்பவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்பகுளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதியின் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவானது பரிந்துரை செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
கடந்த 02.08.2010 அன்று, அந்த மனு தொடர்பாக புகார்தாரர் சரஸ்வதி அப்போது பணியிலிருந்த திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) திலகமணி என்பவரை சந்தித்து மனு தொடர்பாக கேட்டபோது, புகார்தாரர் சரஸ்வதியிடம் சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க ரூ.1,000/-ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி கடந்த 02.08.2010 ம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது புகார்தாரர் சரஸ்வதியிடமிருந்து எதிரி திலகமணி லஞ்சப்பணம் ரூ.1000/-கேட்டு பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து 18.09.2025-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட திலகமணி(முன்னாள் திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் சிறுசேமிப்பு) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பவருக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000/-ம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏகபோக காலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி தண்டணை பெற்றுதர உதவி புரிந்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.