scorecardresearch

கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு: 2 பேர் விடுவிப்பு, 3 பேரிடம் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பேரில் இரண்டு பேரை விசாரணைக்குப் பின் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு: 2 பேர் விடுவிப்பு, 3 பேரிடம் விசாரணை

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். நேற்று முன்தினம் (பிப்ரவரி 13) விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அருகில் உள்ள கடைக்கு சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மனோஜ் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து கொலை குற்றத்திற்கு உதவியாக கூறி சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 5 பேரிடம் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கொலைக்கு நேரடியாக தொடர்புடைய 7 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உதவியதாக 2 சக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் அடைக்கலம் கொடுத்தது என்று சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது விசாரணைக்குப் பின் 2 பேரை போலீசார் விடுவித்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரிடம் மட்டும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Special force inquires 3 person in coimbatore gokul murder case

Best of Express