வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமிழகத்தில் இன்று முதல் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை (இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள்) நீக்குவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி'யை இன்று முதல் (டிசம்பர் 4 வரை) நடத்துகிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை (இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள்) நீக்குவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி'யை இன்று முதல் (டிசம்பர் 4 வரை) நடத்துகிறது.

author-image
WebDesk
New Update
election commision voter list 2

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமிழகத்தில் இன்று முதல் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களையவும், போலி வாக்காளர்களை (இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், போலி வாக்குகள்) நீக்கவும், இந்திய தேர்தல் ஆணையம் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி'யை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணி, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன், இன்று (டிசம்பர் 4) முதல் தொடங்குகிறது.

Advertisment

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர் உள்ளவர்களின் பெயர்கள் இன்னமும் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. தகுதியான வாக்காளர்களை மட்டும் கொண்ட துல்லியமான பட்டியலைத் தயாரிக்கும் நோக்கில் இந்தத் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை அரசு ஊழியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், இந்த சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தத் திருத்தப் பணியை ஒத்திவைக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

Advertisment
Advertisements

"வாக்காளர் பட்டியல் திருத்த பணி, 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும். இந்தப் பட்டியல்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்லப்போவது இல்லை. 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் எந்தெந்த வீடுகளில் உள்ளவர்களின் பெயர்கள் உள்ளதோ, அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வார்கள்.

அங்குள்ளவர்களிடம் விவரங்கள் கேட்கப்பட்டு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும். அந்த வீட்டில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் இருந்தால், அவர்களுக்கும் உரிய விண்ணப்பப் படிவமும், உறுதிமொழி படிவமும் வழங்கப்படும். அந்தப் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டிற்கு 3 முறை வருவார்கள். அவர்கள் அடுத்த முறை வரும்போது, உரிய ஆவணங்களுடன் அவற்றைச் சமர்ப்பித்தால் போதும்.

பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்வது?

2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்தால், அதைத் தெரிவித்து, உரிய ஆவணங்களைக் காட்டி டிசம்பர் 9-ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், தங்களுக்குரிய ஆவணங்களை டிசம்பர் 7-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதிக்குள் சமர்ப்பித்து, பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இடம்பெறச் செய்யலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: