சபரிமலையில் இருமுடி கட்டி சென்று அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் சென்று வரும் நிலையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலைக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சபரிமலையில் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இவ்வாறு கூறினார்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு விஐபி தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் தரிசனத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் இருந்து பாதுகாக்க கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் கோயில் நிர்வாக அலுவலகத்தில் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருவதாகவும் பக்தர்கள் தரிசனம் எளிதில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மண்டல பூஜை மற்றும் மகர பூஜைக்கு வரும் பக்தர்கள் சிரமத்தை போக்கவும் அவர்களின் உணவுக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறினார். தரிசன நேரம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பக்தர்களுக்கு பிஸ்கட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு மக்களுக்கு உதவுவதற்காக கன்னியாகுமரியை சேர்ந்த இருவர் சபரிமலையில் பணியமர்த்த உள்ளதாக கூறினார். தொடர்ந்து பக்தர்கள் இடையூறு இல்லாமல் தரிசனம் செய்ய வழிவகை செய்ய உள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாடு அரசுடன் கலந்து ஆலோசித்து மேலும் பல ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“