/indian-express-tamil/media/media_files/2025/08/03/rabis-dog-3-2025-08-03-12-51-20.jpg)
மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ஜூலை 21 முதல் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
வெறிநோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில், மதுரை மாநகராட்சி பெருமளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ஜூலை 21 முதல் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த விலங்குகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் கால்நடை மருத்தவர்கள் (சுயவிருப்பத்துடன்) மற்றும் இப்பணிக்கு தேவையான வசதிகளை வழங்க விரும்புவோர், மதுரை மாநகராட்சி கால்நடை மருத்துவர் (செல்: 94987 48935) உடன் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதிகள் வருமாறு:
அழகப்பாநகர் முத்துபட்டி: ஆகஸ்ட் 7 முதல் 12 வரை
ஆனையூர்: ஆகஸ்ட் 13 முதல் 20 வரை
கண்ணனேந்தல்: ஆகஸ்ட் 21 முதல் 26 வரை
தத்தனேரி: ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரை
இரயில்வே காலனி, மகபூப்பாளையம்: செப்டம்பர் 3 முதல் 9 வரை
சிந்தாமணி, அனுப்பாண்டி: செப்டம்பர் 9 முதல் 13 வரை
திருப்பரங்குன்றம்: செப்டம்பர் 15 முதல் 19 வரை
இந்த தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.