கடலூர் மாவட்டம் புலியூரை சேர்ந்தவர் ஐயப்பன். இவரின் மனைவி ரஞ்சினி. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐயப்பன், தனது மனைவி ரஞ்சினியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத்தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மனுவை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால சுந்தரம் என்பவர் விசாரித்தார்.
அப்போது, ஐயப்பனிடம் அவரது மனைவியிடம் விவாகரத்து லட்டர் பெற ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து ஐயப்பன் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து, சிறப்பு எஸ்.ஐ. பால சுந்தரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் -களவுமாக பிடித்தனர்.
ஏற்கனவே இதே காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சியாம் சுந்தர், கடந்த சில மாதங்களுக்கு லஞ்சம் வாங்கி கைதானார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/