பயங்கரவாதிகள் கைதுக்கு பழிவாங்க கொல்லப்பட்டாரா எஸ்.ஐ வில்சன் ?

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளின் மூலம் முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

அருண் ஜனார்த்தனன், ஜான்சன் டி ஏ

கேரளாவின் எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு துணை ஆய்வாளர் வில்சன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரில்  அப்துல் ஷமீமை (25) காவல் துறை புலனாய்வு பிரிவு நன்கு அடையாளம் கண்டுள்ளது.  அப்துல் ஷமீம் “ஜிஹாதி  என்று தானாக தன்னை பிரகடனப்படுத்தியவர் ” என்றும் காவல் துறை வர்ணித்துள்ளது.

இந்த வாரம், பெங்களூரில் சந்தேகிக்கும் பயங்கரவாதிகளாக  மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வில்சனின் கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

வில்சன் (57) புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் களியக்காவிளை சோதனைச் சாவடி அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் கத்திகுத்துக் காயங்களும்  இருந்தன. சி.சி.டி.வி காட்சிகளின் மூலம் கொலைக்கு காரணமானவர்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஷமிம்,தோஃபிக் (27) என இருவர் தான் என்று போலீசார் அடையாளம் கண்டறிந்தனர்.

2014ம் ஆண்டில் ஒரு இந்து முன்னனி தலைவரின் கொலை வழக்கில் கடந்த மாதம் ஜாமீன் பெற்று வெளிவந்த ஷமிம், தற்போது வரை தலைமறைவாக இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

அப்துல் ஷமீமை முன்னர் காலத்தில் விசாரித்த அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு தெரிவிக்கையில்,”அவரின் மனநிலை என்னால் நன்கு யூகிக்கமுடியும், அவர் சரணடைய மாட்டார்,  சரணடையவும் வாய்ப்பில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தால் கைது செய்வதற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையை உடைய ஒருவர் தான் ஷமிம் ”என்றார்.

இருவரும் ஒரு எஸ்யூவி காரில் சோதனைச் சாவடியை அடைந்த போது, போலிஸ் தன்னை அடையாளம் காணும் என்ற பயத்தில்  சிறப்பு துணை ஆய்வாளரை சுட்டிருக்கலாம் என்று காவல்துறை முதலில் சந்தேகித்தது.  எவ்வாராயினும் பெங்களூரில் மொஹமட் ஹனீப் கான் (29), இம்ரான் கான் (32)  மொஹமட் ஜைத் (24) ஆகியோரை கைது செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்றே தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர் .

டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினாபு ( திருநெல்வேலி ) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில்,“குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். புதன்கிழமை பிற்பகல் கொலைக்குப் பின்னர் அவர்கள் கேரளாவுக்கு தப்பிச் சென்றதாக எங்களிடம் தகவல் உள்ளது. வாகன சோதனையின்போது இந்த கொலை செய்யப்படவில்லை” என்றார்.

அவர்களது கூட்டாளிகளை குறிவைத்து தாக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு  ஒரு எச்சரிக்கை விடுவதே இந்த கொலையின்  நோக்கமா ?  என்று கேள்விக்கு அபினாபு “வில்சன் கொலையின்  அடிப்படைக் காரணம் அதுதான் என்று நாங்கள் கருதுகிறோம்.”என்றார்.

வெள்ளிக்கிழமை, வில்சன் கொலைக்குப் பின்னர், தமிழ்நாடு டிஜிபி  ஜே.கே திரிபாதி திருவனந்தபுரத்திற்கு சென்று  கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவை சந்தித்தார். வில்சனின் குடும்பத்தை சந்தித்து திரிபாதி ஆறுதல் கூறினார். வில்சனின் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிவாரணம் தருவதாக தமிழக அரசு  சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்போஸ்டுக்கு அருகிலுள்ள ஜமாத் அலுவலகத்திற்குள் ஷமிம் மற்றும் தோஃபிக் ஓடுவதை சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சில வட்டாரங்கள் தெரிவிகின்றன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னானி தலைவர் கே.பி சுரேஷ்குமார் கொலை செய்வதற்கு ஷமிம் ,எஸ் சையத் அலி நவாஸ், சி காஜா மொய்தீன் ஆகிய மூன்று பேருக்கு உதவி செய்ததாக புதன்கிழமை மூன்று  பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். ஷமிம், நவாஸ் இருவரும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள், மொய்தீன் கடலூரைச் சேர்ந்தவர் ”என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.


வில்சனின் கொலையின் மூலம் கடந்த ஒரு மாத காலமாக போலிசாரால் தேடப்படும் மொய்தீன் பற்றிய கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பல பயங்கரவாத வழக்குகளில் இவர் பெயரிடப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு ஐஎஸ்ஐஎஸ் தலைவர் என்று வர்ணிக்கப்படும் இந்த மொய்தீனையும் அவரது கூட்டாளியுமான நவாசையும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு சில நாட்களுக்கு முன்பு கைது செய்தது.

சுரேஷ்குமாரின் கொலை தவிர, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு  இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இந்த மொய்தீன்.

மொய்தீன், ஃபக்ருதீன் மற்றும் பலர் மீது என்ஐஏ 2017 ல் வழக்கு போடப்பட்டு, மார்ச் 13, 2018 அன்று மொய்தீன்  மீதான குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது.

டிசம்பர் 12, 2019 அன்று ஜாமீனில் வெளிவந்த மொய்தீன், தெற்கு பெங்களூரு பகுதியில் பல கூட்டங்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த  கூட்டங்களில் ஷமிம்,தோஃபிக் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரியப்படுகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close