2023ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெல்லை வரை சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் சேவையை, ஜனவரி 14ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு, சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06049) மறுநாள் காலை 9 மணியளவில் நெல்லையை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகை முடிவடைந்தது, ஜனவரி 18ஆம் தேதி மாலை 05.50 மணிக்கு நெல்லை சந்திப்பிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06050) மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செயல்படுத்தப்படும் இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக நெல்லை செல்கிறது.
இந்த சிறப்பு ரயிலுக்காக முன்பதிவு நாளை (ஜனவரி 13ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil