மைசூரு முதல் சென்னை வரை செயல்படவிருக்கும் அதிவேக ரயில் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட இருக்கிறது.
இந்த சிறப்பு ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160-180 கிலோமீட்டர் வேகம் கொண்டு, ரயில் பாதையில் 75-77 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் 'சதாப்தி எக்ஸ்பிரஸை' விட சற்று வேகமானது என்று கூறப்படுகிறது.
இந்த ரயிலை நவம்பர் 11ஆம் தேதி அன்று, பெங்களூருவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது பயண நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களால் வேகத்தில் கட்டுப்பாடுகளுடன், தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயங்கும்.
பெங்களூரில் உள்ள கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு பயணிகள் எளிதாக அணுகி, பிளாட்பாரம் எண்.7ல் இந்த சிறப்பு ரயில் மூலம் பயணிக்கலாம் என்று கூறுகின்றனர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும் ரயில் சேவை) சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு செல்லும் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் இருந்து காலை 5.50 மணி அளவில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் சேவை, காலை 8.30 மணிக்கு ஜோலார்பேட்டை சந்திப்பு வந்தடையும். அதன் பிறகு, காலை 10.30 மணியளவில், கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திற்கு வருகைப்புரியும். மேலும், மதியம் 12.30 மணிக்கு மைசூரு சந்திப்பில் இருந்து புறப்படும். இந்த சிறப்பு ரயிலின் வேகம் மணிக்கு 75.60 கிலோமீட்டர் என்றும், பயண நேரம் 6.40 மணிநேரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும் ரயில் சேவை) மைசூரிலிருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு செல்லும் என்று தற்காலிகமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மதியம் 1.05 மணியளவில், மைசூரிலிருந்து புறப்படும் இந்த ரயில் சேவை, பிற்பகல் 3 மணியளவில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். பிறகு, ஜோலார்பேட்டை சந்திப்பிற்கு மாலை 4.55 மணியளவில் சென்றடையும். இரவு 7.45 மணியளவில், சென்னை வந்தடையும்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் (செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும் சிறப்பு ரயில்) சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு செயல்படும் என்று தற்காலிகமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் சேவை, காலை 8.50 மணிக்கு ஜோலார்பேட்டை சந்திப்பு சென்றடையும். பின்பு, காலை 10.45 மணிக்கு, கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு வருகைபுரியும். பின்னர், மதியம் 1 மணிக்கு மைசூருக்கு சென்றடையும். இந்த ரயில் சேவையின் பயண நேரம் 7 மணிநேரம் என்றும், வேகம் மணிக்கு 72.04 கிலோமீட்டர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மைசூரிலிருந்து பெங்களூரு வழியாக சென்னை புறப்பாடு இந்த ரயில் சேவை, மைசூரிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு, கே.எஸ்.ஆர் பெங்களூருக்கு மாலை 4.10/4.15 மணியளவில் சென்றடையும். பின்பு, ஜோலார்பேட்டையை மாலை 6.25 மணிக்கு கடந்து, சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனின் பயண நேரம் 7.15 மணிநேரம் என்றும், வேகம் மணிக்கு 69.56 கிலோமீட்டர் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.