வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது என்று சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் அவர்கள் கூறியதாவது, “பொங்கல் பண்டிகைக்கு மக்கள் கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்க்கும் விதத்தில், எர்ணாகுளம் முதல் சென்னை சென்ட்ரல் வரையில் சிறப்பு ரயில் (எண்:06046) இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அன்று, இரவு 11.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் சேவை புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும்.
இதேபோல, இந்த சிறப்பு ரயில் (எண்: 06045), சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் ஜனவரி 13ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, எர்ணாகுளத்திற்கு வந்தடையும்.
ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் செல்லும் இந்த சிறப்பு ரயில், செல்லும் வழியில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil