பழனி முருகன் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே கோயம்பத்தூரில் இருந்து திண்டுக்கலுக்கு இடையே, முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி கோயம்பத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பயணிக்க நினைக்கும் மக்கள், ஜனவரி 28, 29 மற்றும் பிப்ரவரி 4,5,6 ஆகிய நாட்களில் காலை 9.20 மணிக்கு இந்த ரயில் சேவைகளை எதிர்பார்க்கலாம்.

மேலும், திண்டுக்கல்லில் இருந்து கோயம்பத்தூரிற்கு, இதே நாட்களில் மதியம் 2 மணிக்கு இந்த சிறப்பு ரயில் சேவையை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.