சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, 4 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் ஆக.14 முதல் 18 வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில்: ஆகஸ்ட் 14 அன்று, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:50 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06027), மறுநாள் காலை 8:30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். திரும்பும் பயணத்தில், ஆகஸ்ட் 17 அன்று, போத்தனூரில் இருந்து இரவு 11:30 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06028), மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்: ஆகஸ்ட் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில், மங்களூரு சந்திப்பில் இருந்து மாலை 7:30 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06041), மறுநாள் காலை 8:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில், திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5:15 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06042), மறுநாள் காலை 6:30 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும்.
நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்: ஆகஸ்ட் 17 அன்று, நாகர்கோவிலில் இருந்து இரவு 11:15 மணிக்குக் கிளம்பும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06012), மறுநாள் காலை 10:55 மணிக்குத் தாம்பரம் சென்றடையும். திரும்பும் பயணத்தில், ஆகஸ்ட் 18 அன்று, தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011), மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில்: ஆகஸ்ட் 14 அன்று, சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9:55 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089), மறுநாள் காலை 11:30 மணிக்குச் செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 17 அன்று, செங்கோட்டையில் இருந்து இரவு 7:45 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06090), மறுநாள் காலை 9:05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8:00 மணிக்குத் தொடங்கும்.