IRCTC : புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2019 புதிய வருடம் பிறக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பலரும் தங்களில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். அதுவும் 2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் திங்கள் கிழமையே தொடங்குகிறது.
E-Ticket Booking: உங்கள் செல்போனில் இந்த செயலி இருந்தால் போதும்... ஈஸியாக டிக்கெட் வாங்கலாம்
14ம் தேதி போகி கொண்டாட்டத்தில் தொடங்கி, புதன் கிழமை மாட்டுப் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்கள் இப்போதே தங்களின் பயண சீட்டுகளை பதிவு செய்ய தொடங்கியிருக்கின்றனர். அதிலும், திங்கள் கிழமை பண்டிகை கொண்டாட்டத்திற்கு முன்பு வார இறுதி வருவதால், பலரும் சனிக்கிழமையே ஊருக்கு புறப்படும் திட்டத்தில் இருக்கிறார்கள்.
IRCTC : பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இவர்களுக்காக எல்லா ஆண்டை போல இந்த அண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களில் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
- செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 1 மற்றும் 15-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.
- சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே, டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 25 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
- ஜனவரி 8 முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
- நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 2 மற்றும் 16-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜனவரி ஒன்று முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் புறப்படும்.
- மறுமார்க்கத்தில், ஜனவரி 9 முதல் பிப்ரவரி 27 வரை அனைத்து புதன்கிழமைகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
- சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 4, 11, 12, 18 25, பிப்ரவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில், ஜனவரி 3, 6, 10, 15, 16, 27 பிப்ரவரி 17, 24 ஆகிய நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
IRCTC : சிறப்பு ரயில் அறிவிப்பு:
நாகர்கோவில் - சென்னை
/tamil-ie/media/media_files/uploads/2018/12/nagercoil-to-chennai-train-1024x663.jpg)
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி
சுவிதா ஸ்பெஷல் ரயில்
/tamil-ie/media/media_files/uploads/2018/12/chennai-egmore-to-thirunelveli-1-1024x663.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/thirunelveli-to-chennai-egmore-1-1024x663.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/chennai-egmore-to-thirunelveli-2-1024x663.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/thirunelveli-to-chennai-egmore-2-1024x663.jpg)
சுவிதா ரயில்:
/tamil-ie/media/media_files/uploads/2018/12/suvitha-train-1024x662.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/suvitha-train-2-1024x662.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/suvitha-train-3-1024x662.jpg)