IRCTC: சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் செல்லுவதற்கு சிறப்பு ரயில்களை இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்டு 3, 17, 24, 31, செப்டம்பர் 7, 21 ஆகிய வெள்ளிக் கிழமைகளில் இரவு 9.50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 10.50 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 2, 9, 23 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.
ஆகஸ்டு 7, 14, 28, செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் பகல் 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். ஆகஸ்டு 8, 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைப்பெற்று வருகிறது.