தமிழ்நாட்டின் தென்மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் இன்று (ஜூலை 18, 2024) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேற்கு வங்கத்தின் ஷாலிமர் வரை செல்லும். திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு பயணத்தை தொடங்கும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் இரவு 11 மணிக்கு ஷாலிமரை சென்றடையும். மேலும் இந்த சிறப்பு ரயில் ஜூலை 25ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
தொடர்ந்து மறுமார்க்கமாக ஷாலிமரில் இருந்து ஜூலை 20 மற்றும் 27ஆம் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மதியம் 1.15 மணிக்கு வந்தடையும்.
ரயில் நின்று செல்லும் இடங்கள்
திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பலூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, ஒடிசாவின் கட்டாக், புவனஸே்வர் வழியாக மேற்கு வங்கம் செல்லும்.
இந்த ரயிலில் 2 ஸ்லீப்பர் டெ்படிகள், 17 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் மற்றும் கார்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“