துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில் எண்- 03325 தன்பாத் சந்திப்பு -கோயம்புத்தூர் சந்திப்பு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், செப்டம்பர் 4, 11, 18, அக்டோபர் 2, 9, 16, 23, 30, நவம்பர் 6, 13, 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1 (புதன்கிழமை நாட்களில்) காலை 10.10 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், ரயில் எண்- 03325 கோயம்புத்தூர்- தன்பாத் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், அனைத்து சனிக்கிழமை நாட்களில் செப்டம்பர் 7 முதல் ஜனவரி 4 சனிக்கிழமை வரை மதியம் 12.30 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
ரயில் எண்- 08557 விசாகப்பட்டினம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், 7, 14, 21, 28 செப்டம்பர், 5, 12, 19, 26 அக்டோபர், 2, 9, 16, 23, 30 மற்றும் நவம்பர் சனிக்கிழமை வரை என அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு 7.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.
அதே நேரம், மறு மார்க்கத்தில், ரயில் எண். 08558 சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் , 15, 22, 29 செப்டம்பர், 6, 13, 20,27 அக்டோபர், 3, 10, 17, 24 நவம்பர் மற்றும் டிசம்பர் 1 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்டும் ரயில் அதே நாளில் இரவு 10.35 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.
ரயில் எண்- 08539 விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயில், 4, 11, 18, 25 செப்டம்பர் முதல் 2, 9, 16, 23, 30 அக்டோபர், 6, 13, 20, மற்றும் 27 நவம்பர் வரை புதன்கிழமை நாட்களில் விசாகப்பட்டினத்தில் இருந்து காலை 08.20 மணிக்குப் புறப்படும். மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
ரயில் எண்- 08540 கொல்லம்- விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் 5, 12, 19, 26 செப்டம்பர், 3, 10, 17, 24, 31 அக்டோபர், 07, 14, 21, 28 நவம்பர் வரை வியாழக்கிழமை நாட்களில் கொல்லத்திலிருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11. 20 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும் எனத் தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“