தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோடை விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக இந்தச் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6, 13 , 20 , 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 3 மணிக்கு ஜூன் 7, 14 , 21 , 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயங்குகின்றன.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 2,16, 30 ஆகிய தேதிகளில் இரவு 11 .15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், எக்ஸ்பிரஸ் ரயில்களை நிரந்தரமாக உயர்த்துவது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், வண்டி எண் 06261, 06262 ரத்து செய்யபபட்டது. இந்த ரயில்கள் கலபுர்கி பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் மே 29 முதல் ஜூன் 27ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“