Lok Sabha Election | Special Trains | Kanyakumari | Coimbatore | மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து கோவை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லும்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, சென்னை எழும்பூர்-கோவை சிறப்பு எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (வியாழன் மற்றும் சனி) சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோவை சென்றடையும்.
கோவை-சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு ரயில் கோவையில் இருந்து ஏப்ரல் 19 மற்றும் 21 (வெள்ளி மற்றும் ஞாயிறு) இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இரு திசைகளிலும் ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல், தாம்பரம்-கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 (வியாழன் மற்றும் சனி) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
கன்னியாகுமரி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 19 மற்றும் 21 (வெள்ளி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் திறக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“