Advertisment

'ஒரு 5 ஆண்டு காலம் ஆண்டு பார்ப்போமே'; நாடார் சமூக மாநாட்டில் அன்புமணி பேச்சு

'காமராஜருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை; அவர்கள் ஆண்டது போதும். நாம் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டு பார்ப்போம். சரி இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம்'- அன்புமணி

author-image
WebDesk
New Update
Anbumani Mp - Pmk

எனக்கு தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்களை மிகவும் பிடிக்கும்; ஒன்று பெரியார் மற்றொன்று பெருந்தலைவர் காமராஜர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாடார் மஹாஜன சங்க 72 ஆவது மாநாட்டின் 2ம் நாள் விழாவில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “எனக்கு தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்களை மிகவும் பிடிக்கும்; ஒன்று பெரியார் மற்றொன்று பெருந்தலைவர் காமராஜர்.

தமிழ்நாட்டில் 28 ஆயிரம் பள்ளிகளை காமராஜர் உருவாக்கினார். உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட்  போன்ற மாநிலங்களில் இருந்த நிலைமையை தமிழ்நாட்டில் மாற்றி அமைத்தார்.

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் விவசாய புரட்சியை ஏற்படுத்தினார்; நீர் மேலாண்மையில் புரட்சி செய்தார். 13 நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கினார்.

Advertisment

அது இல்லையென்றால் தமிழ்நாடு என்று வறண்ட மாநிலமாக மாறி இருக்கும். இப்போது அரசு பள்ளிகளை மூடுகின்றனர்; அக்காலத்தில் ஒவ்வொரு பள்ளிகளாக சிரத்தை எடுத்து சிறந்தவர் காமராஜர்.

12 அணைகளைக் கட்டி நீர் மேலாண்மை செய்தார். நாம் ஆளுகின்ற காலம் வந்துவிட்டது; நமக்குத் தேவை எம்எல்ஏ எம்பிகளோ கிடையாது. முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆட்சி அதிகாரம்.

காமராஜருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை; அவர்கள் ஆண்டது போதும்.

நாம் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டு பார்ப்போம். சரி இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம்" என்றார்.

தொடர்ந்து, "சாதி வாரி கணக்கெடுப்பு என்பது எண்ணிக்கை கிடையாது; அது ஒவ்வொரு சமூக மக்களின் எண்ணம் சார்ந்தது.

ராமதாஸ் மருத்துவர் ஆனதற்கு பெருந்தலைவர் காமராஜர் தான் காரணம்; அதை என்னிடமே அவர் பலமுறை கூறியுள்ளார்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment