/tamil-ie/media/media_files/uploads/2023/05/dead-17.jpg)
Speeding car hits bike
கோவை பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மலை (15) திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை நவக்கரை பகுதியில் உள்ள பயிற்சியாளரிடம் விட தனது சக்கர வாகனத்தில் நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார்.
பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக வந்த ஜாகிர் உசேன் கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஜாகிர் உசேன் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இச்சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட இரு சக்கர வாகனம் பின்னால் வந்த வேனின் முன்பகுதி கண்ணாடியை உடைத்து கொண்டு சிக்கியது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-25-at-11.00.19-1.jpeg)
வேனில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிந்த ஜாகிர் உசேன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதிவேகமாக வந்த கார்: பைக் மீது மோதி விபத்து; பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சி #Coimbatore | #Car | #Bikepic.twitter.com/fjM5wWgIvk
— Indian Express Tamil (@IeTamil) June 25, 2023
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.