scorecardresearch

கோவையில் நடைபெற்ற தேசிய பார்முலா – 4 கார் பந்தயம் !

கோவையில் நடந்த தேசிய பார்முலா – 4 கார் பந்தயம் முதல் சுற்றில் ஆர்யா சிங் மற்றும் சந்தீப் குமார் முதலிடத்தை பிடித்தனர்.

கோவையில் நடைபெற்ற தேசிய பார்முலா – 4 கார் பந்தயம் !

கோவையில் நடந்த தேசிய பார்முலா – 4 கார் பந்தயம் முதல் சுற்றில் ஆர்யா சிங் மற்றும் சந்தீப் குமார் முதலிடத்தை பிடித்தனர்.

கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள ‘கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே டிராக்கில்’ ஜே.கே., டயர் சார்பில், 25வது தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று நடந்தது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். எல்.ஜி.பி., பார்முலா 4, நோவிஸ் கப், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி., கப், மற்றும் ஜே.கே., டயர் எண்டுரன்ஸ் கப் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், பார்முலா 4 பிரிவு இரண்டாவது  பந்தயங்களில் ஆர்யா சிங் முதலிடத்தையும், விஸ்வாஸ் விஜயராஜ் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். மூன்றாவது பந்தயத்தில், சந்தீப் குமார் முதலிடத்தையும், அஸ்வின் தட்டா இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

நோவிஸ் கப் பிரிவில், மூன்றாவது பந்தயத்தில், ஆதித்யா பரசுராம் முதலிடத்தையும், கைல் குமரன் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். நான்காவது பந்தயத்தில், கைல் குமரன் முதலிடத்தையும், ஆதித்யா பரசுராம் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி., கப் ‘புரோ’ பிரிவில் நவனீத் குமார் முதலிடத்தையும், உல்லாஸ் எஸ் நந்தா இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

‘அமெச்சூர்’ பிரிவில், சூர்யா மற்றும் ஜே.கே., டயர் எண்டுரன்ஸ் கப் பிரவில், அபிஷேக், அமர்நாத் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.

தொடர்ந்து, 2வது சுற்றுப்போட்டிகள் கோவையில் நடக்கவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sports card race in kovai