சென்னை நுங்கம்பாக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி சரண் முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்.25) எஸ்.பி.பி நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை காம்தார் நகர் மெயின் ரோடு முதல் தெருவுக்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயரிடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலினுக்கு எஸ்.பி.பி சரண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " தன் குடும்பத்தின் சார்பில் அரசுக்கு வைத்த கோரிக்கையை இரண்டு நாட்களில் நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கும் நன்றி" என அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“