இலங்கை குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா

7வதாக மதியம் மீண்டும் வெடித்த வெடிகுண்டு... இருவர் பலி!

Sri Lanka Cinnamon Grand Hotel Bomb Blast Actress Radhika Sarathkumar : இலங்கையில் இன்று காலை முதலே மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காலையில் சிறப்பு பிரார்த்தனைகளுக்காக மக்கள் குழுமியிருந்த தேவாலயங்களில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு  தேவாலயங்கள், இரண்டு நட்சத்திர விடுதிகள் என காலையிலேயே 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலா மற்றும் இதர தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றிருக்கும் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலையில் தாக்குதலுக்கு ஆளான விடுதியில், சின்னமன் கிராண்ட் ஹோட்டலும் ஒன்று. இலங்கையின் கொழும்புவில் அமைந்திருக்கிறது இந்த விடுதி.

நடிகை ராதிகாவின் ட்வீட்

தமிழகத்தை சேர்ந்த நடிகை ராதிகாவும் இன்று காலை இந்த விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். இன்று காலை அங்கிருந்து வெளியேறிய சில மணி நேரத்திற்குள் அந்த விடுதியில் மாபெரும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close