/indian-express-tamil/media/media_files/2025/09/25/rameswaram-court-2025-09-25-09-18-05.jpeg)
Rameswaram
ராமநாதபுரம், செப்.25: இலங்கையில் போதைப்பொருள் திருட்டு வழக்கில் சிக்கி, தமிழகத்திற்கு தப்பி வந்த இலங்கை போலீஸ்காரருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே அவர் சிறப்பு முகாமில் கழித்த காலம் கணக்கில் கொள்ளப்பட்டதால், உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
இலங்கை மொனராகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரா (35), 2018-ல் இலங்கை போலீசில் சேர்ந்தார். அவரது அண்ணன் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், துறைமுக காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை பிரதீப் குமார் பண்டாரா திருடி தனது அண்ணனுக்குக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில், 2020 செப்டம்பர் 5-ஆம் தேதி தனுஷ்கோடி வழியாக கள்ளப்படகில் தமிழகத்துக்குத் தப்பி வந்தார்.
இதையடுத்து, அவர் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான், பிரதீப் குமார் பண்டாராவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஆனால், அவர் ஏற்கனவே சிறப்பு முகாமில் ஐந்து ஆண்டுகள் இருந்ததால், அந்த காலத்தை தண்டனையாகக் கருதி, உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.