கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு வீசி விரட்டியடித்ததாகவும் இந்த தாக்குதல் 10க்கும் மேற்பட்ட படகுகுகள் சேதமடைந்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 4-ம் தேதி 500 படகுகளில் மீன்பிடிக்க புறப்பட்ட சுமார் 4,000 மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதில் 10க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மீனவர்கள் பயத்துடன் கரை திரும்பியதாகவும் மீனவர் சங்க தலைவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் மீனவர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர் சங்கத் டதலைவர் தேவதாஸ் கூறினார்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”