Advertisment

திருச்சி: ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து இலங்கை கைதி தப்பி ஓட்டம்

இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் என்பவர் இன்று காலை அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை எண் 9 இன் ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து தப்பியோடி விட்டார்.

author-image
WebDesk
New Update
Sri Lankan prisoner escapes from Trichy Central Jail Special Camp Tamil News

இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் மீது சென்னை கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் இன்றி கள்ளத் தோனி மூலம் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி இருந்தது, மேலும், ஆயுத கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

மத்திய சிறையில் இருக்கக்கூடிய சிறப்பு முகாமில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நீண்ட நாள் சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் உடனடியாக தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், தங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதே சமயம், சில நேரங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம், சிறை வளாக சுவற்றின் மீது ஏறி நூதன முறையில் போராட்டம் என அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை நாட்டை சேர்ந்த சிலர் உடனடியாக தங்களை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் என்பவர் இன்று காலை அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை எண் 9 இன் ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்து தப்பியோடி விட்டார்.

இலங்கையைச் சேர்ந்த அவர் மீது சென்னை கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

மேலும், சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டார். 

கடந்த 2019 ம் ஆண்டு பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் (வயது, 55) என்பவர், கடந்த 2019ம் ஆண்டு, ஆன்-லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டநிலையில், அவரும் தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய அவரை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், மேலும் ஒருவர் தப்பி ஓடிய நிகழ்வு திருச்சி சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment