ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998ல் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பானது கோவை துடியலூர் அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
1998ல் இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று இந்தியா மற்றும் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் 100 முன்னாள் மாணவ மாணவியர்கள் குடும்பத்துடன் விழாவிற்கு வருகை புரிந்து கலந்து கொண்டனர்.
அவர்கள் தங்களுடைய கல்லூரி கால அனுபவங்களையும் கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் சுவாரசியமாக முன்னாள் மாணவர்கள் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும், தற்போதைய திறன் படைத்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கு ஊக்கம் தருவதற்காக ரூபாய் 50 லட்சத்திக்கான காசோலையை வழங்கினார்கள்.
முன்னாள் கல்லூரி மாணவர்களின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியரும் மற்றும் எழுத்தாளருமான கு.ஞானசம்பந்தம் பேசியதாவது.
மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது எங்களுக்கு பெருமை. மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை உடையது ஈராயிரம் ஆண்டு பழமை நன்றாக சொன்னால் கீழடியில் இன்னும் நாழு அடி தொண்டினால் முதல் தமிழனே நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் எனவும்
முதல் மனிதனே ஒரு எண்ணம் ஏற்படும் அந்த வகையில் பழமை மிகு பெருமைமிகுந்த மதுரையில் நூலகம் கலைஞர் பேரில் ஏற்படுகிறது.
அது எங்களுக்கு எல்லாம் கிடைத்த பெருமையாக கருதுகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு நூலகத்தின் பெருமை தான் உலகம் முழுவதும் மக்களால் அறிய படுகின்றது.
அதுவும் ஆறு தளங்களை கொண்டதாக அது அமைந்து இருக்கிறது அதனுடைய சிறப்புகளை எல்லாம் பார்த்தேன் எங்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகின்றோம்.
இந்த நூலகத்திற்க்கு நம்முடைய முதல்வர் வந்து திறந்து வைக்கிறார் அவர்களை மதுரை மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறோம்” என்றார்.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“