srilanka Lanka druglord death : கோவையில் மாரடைப்பால் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்தவர், இலங்கையில் போதைபொருள கடத்தல் தாதா அங்கொட லொக்கா என்று தகவல் பரவி வருகிறது. இதுக் குறித்த விசாரணையை தமிழக போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தாதா அங்கொட லொக்கா. இவர், போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்தவர். நிஜ உலக தாதாவாக இலங்கையில் சுற்றி வந்தார். இந்நிலையில், 1 மாதத்திற்கு முன்பு கோயம்புத்தூரில் மாரடைப்பால் இறந்த பிரதீப்சிங் என்பவர் தான்,இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்த அங்கொட லொக்கா என்ற தகவல் பரவி வருகிறது.
இலங்கையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கேங்ஸ்டார் பிரச்சனையில் அங்கொட லொக்கா தலைமறைவாகினார். அவரை,இலங்கை காவல் துறையினர் தேடிவந்தனர். அங்கொட லொக்கா , இந்தியாவில் தஞ்சம் அடைந்து தலைமறைவாக வாழ்ந்து வருவதாக சென்ற வருடம், இலங்கை ஊடக துறையில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், 1 மாதத்திற்கு முன்பு கோயம்புத்தூரில் மாரடைப்பால் இறந்த பிரதீப்சிங் தான், தாதா அங்கொட லொக்கா என்ற தகவல்கள் வேகமாக பரவிவருகின்றன. இதுக் குறித்து இலங்கை ஊடகங்கள் அங்கொட லொக்கா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.
இதுக் குறித்து, இலங்கை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள பக்கத்தில் அளித்த பிரத்யேக பேட்டியில், அங்கொட லொக்கா இறந்து விட்டதாக இன்னும் தகவலை உறுதிப்படுத்தவில்லை. இதுக் குறித்து விசாரணையை துவங்கியுள்ளோம் என்றார்.
சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், லொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் கார்டை தயார் செய்து கோவை, பெங்களூர், மதுரை என சுற்றி வந்தாகவும் கூறப்படுகிறது. இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண் கோயம்புத்தூரில் பிரதீப் சிங் என்ற பெயரில் வாழ்ந்து வந்த லொக்காவை அடிக்கடி வந்து பார்த்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இப்போவது அந்த பெண்ணிடம் விசாரனை நடைப்பெற்று வருகிறது.
கோயம்புத்தூரில் தங்கி இருந்த லொக்கா, திடீரென்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர். பின்பு அவரது உடலை மதுரைக்கு எடுத்து செல்ல, சிவகாமி சுந்தரி ஆதார் கார்டு கொடுத்திருந்தார். அதில், அவரது பெயர் பிரதீப்சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அந்த ஆதார் போலி என்று தெரியவந்தது. இதுக் குறித்த விசாரணையை கோயம்புத்தூர் போலீசார் துரிதப்படுத்தும் போது தான் உயிரிழந்தது பிரதீப்சிங் இல்லை, அங்கொட லொக்கா என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை போலீசாரின் கோரிக்கையை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகாமி சுந்தரியும், திருப்பூரில் வசித்து வரும் தியானேஷ்வரன் ஆகியோரும் இணைந்து அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோருக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வீடு எடுத்து கொடுத்து, போலி ஆதார் தயார் செய்து கொடுத்தது வரை இருவருக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடைசி நேரத்தில், லொக்காவுடன் இருந்த அந்த பெண் அமானி தான்ஜி, லொக்காவால் கொல்லப்பட்ட கூட்டாளியின் மனைவி என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கோயம்புத்தூரில் லொக்கா சட்ட விரோத புரத சத்து மருந்துகளை விநோயித்து வந்தார். போலீ ஆதார், அவருக்கு உதவிய வழக்கறிஞர் மற்றும் அவரின் நண்பர் குறித்த அனைத்து தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்
அதே நேரம் இந்த வழக்கு பற்றி பேசிய இலங்கை காவல் அதிகாரி, “கோவையில் இறந்தது லொக்கா தான் என்ற தகவலை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இதுக் குறித்து எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன். கடந்த வருடம் லொக்காவுக்கு லாரியில் விபத்து நடந்து அவர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இப்போது அவ்ர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுதான் பெருத்த சந்தேகங்களை எழுப்புகின்றன. அதுமட்டுமில்லை, லொக்கா பிளாஸ்டி சர்ஜரி செய்து உலா வ்ருவதாக ஆதரங்கள் இருக்கின்றன. லொக்கா இறந்து விட்டதாக எங்களை நம்ப வைப்பதற்கே இந்த சதியா? என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil