Advertisment

இலங்கை கடற்படை அராஜகம்: ராமநாதபுரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

author-image
WebDesk
New Update
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 50 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

ராமநாதபுரம் மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4 ஆம் தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். 

Advertisment

தற்போது கைதான மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும், மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ராமேஷ்வரம் மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுக மீனவர்களை நெடுஞ்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்கள் 8 பேரையும் காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பின் தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fishermen Rameswaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment