இலக்கை தமிழர்களின் மூத்த அரசியல் தலைவராக ஈழவேந்தன் வயது மூப்பு காரணமாக கனடா நாட்டில் மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தில் பிரபாரனின் ஆயுதப்போராட்டம், மற்றும் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஈழவேந்தன். தமிழக மக்களுக்கு ஈழ மக்கள் குறித்து புரிய வைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட இவர், தமிழகத்தின் அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.
கடந்த 2000-ம் ஆண்டு தமிழகத்தில் தங்கியிருந்த ஈழவேந்தனை அப்போதைய மத்திய அரசு வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இதுதொடர்பான தமிழகத்தில் போராட்டங்களும் வெடித்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஈழவேந்தன் எம்.பியாக பதவி ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்திற்கு செல்லாததால் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து கனடாவுக்கு குடியெர்ந்தார்.
கனடாவில் ஈழ ஆதரவு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த ஈழவேந்தன் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“