தமிழ்நாட்டில் சிவில் நீதிபதிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின (எஸ்டி) நீதிபதி என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், ஏற்கெனவே, 10 எஸ்டி பிரிவு நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையைச் சேர்ந்த 23 வயது வி. ஸ்ரீபதி, சிவில் நீதிபதியாக நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி என்று குறிப்பிட்டு சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின (எஸ்டி) பிரிவைச் சேர்ந்தவர்கள், கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது மாநிலத்தின் மூத்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எஸ். அல்லி. தற்போது சென்னையில் இருக்கிறார். இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு குறிப்பிட்டார்.
பிப்ரவரி 16, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதித்துறையில் 10 பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாக பணியாற்றி வருவதாக சந்துரு தெரிவித்துள்ளார். அவர்களில் மாவட்ட நீதிபதி பிரிவில் ஒரு நீதித்துறை அதிகாரியும், சீனியர் சிவில் நீதிபதிகளில் 4 பேர்களும், 5 சிவில் நீதிபதிகளும் உள்ளனர் என்று கே. சந்துரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை நீதிபதிகளில் ஒருவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையை ஒட்டி அமைந்துள்ள ஜவ்வாது மலையை சேர்ந்தவர் என்றும் அவர் ஸ்ரீபதியின் சொந்த ஊர்க்காரர் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு கூறினார். “அதனால், இப்போதுதான் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் சிவில் நீதிபதியாகி இருக்கிறார் என்று கூறுவது தவறு” என்று முன்னாள் நீதிபதி கே சந்துரு கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு, தமிழ்நாடு நீதித்துறையில் எஸ்டி பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் 1% இடஒதுக்கீட்டைக் கணக்கில் கொண்டாலும், அதன்படி, தமிழ்நாட்டில் 15 மாவட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 10 நீதிபதிகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கே. சந்துரு தெரிவித்துள்ளார்.
உயர் நீதித்துறையிலும் எஸ்டி பிரிவினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று கே சந்துரு வலியுறுத்தியுள்ளார். மேலும், உச்ச நீதிமன்ற கொலீஜியமும் அத்தகைய தேவையை மார்ச் 2023-ல் அங்கீகரித்ததாகவும், அதே நேரத்தில் கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒரு வழக்கறிஞரின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாகவும் கே. சந்துரு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“