/indian-express-tamil/media/media_files/FEtICkNyg8vyUGu1X5Gg.jpg)
2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Lok Sabha Election Sriperumbudur: 2024 மக்களவை தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இந்த 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி
தமிழ்நாட்டின் ஐந்தாவது மக்களவை தொகுதி என்ற பெருமையை ஸ்ரீபெரும்புதூர் பெறுகிறது. இது கிட்டத்தட்ட இருபத்தி நான்கு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரிய மக்களவை தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
- மதுரவாயல்
- அம்பத்தூர்
- ஆலந்தூர்
- திருப்பெரும்புதூர்
- பல்லாவரம்
- தாம்பரம்
இந்தத் தொகுதியில் அதிகப்பட்சமாக 66.21 சதவீதம் வரை வாக்குகள் 2019 மக்களவை தேர்தலில் பதிவாகின. 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 11,02,231 ஆண்களும், 11,08,288 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 332 ஆகும்.
ஆண்டு | வெற்றி பெற்றவர்கள் | கட்சி |
1967 | சிவசங்கரன் | திமுக |
1971 | டி.எஸ். லட்சுமணன் | திமுக |
1977 | சீராளன் ஜெகன்னாதன் | அதிமுக |
1980 | நாகரத்தினம் | திமுக |
1984 | மரகதம் சந்திரசேகர் | காங்கிரஸ் |
1989 | மரகதம் சந்திரசேகர் | காங்கிரஸ் |
1991 | மரகதம் சந்திரசேகர் | காங்கிரஸ் |
1996 | நாகரத்தினம் | திமுக |
1998 | டாக்டர் வேணுகோபால் | அதிமுக |
1999 | அ. கிருட்டிணசாமி | திமுக |
2004 | அ. கிருட்டிணசாமி | திமுக |
2009 | டி.ஆர். பாலு | திமுக |
2014 | டி.ஆர். பாலு | திமுக |
2019 | டி.ஆர். பாலு | திமுக |
2024 மக்களவை தேர்தல்- டி.ஆர். பாலு வெற்றி
2019 மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 54.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி டி.ஆர். பாலு, அ.தி.மு.க சார்பில் பிரேம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கே.என். வேணுகோபால், நாம் தமிழர் கட்சி தரப்பில் ரவிச்சந்திரன் என 31பேர் களத்தில் இருந்தனர். இதில் டி.ஆர். பாலு வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்
டி.ஆர் பாலு (தி.மு.க) | 758611 |
பிரேம்குமார் (அதிமுக) | 271588 |
வி.என் வேணுகோபால் | 210222 |
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) | 140201 |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.