தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதாகவும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
Advertisment
திருவிழா நாட்களில் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களில், நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயிலில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில், மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
உண்டியல் காணிக்கைகள் கணக்கிடும் பணியில் கோயில் மேலாளர் தமிழ்செல்வி, கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், சரண்யா, மீனாட்சி, வெங்கடேசன், வேல்முருகன் ஆய்வாளர்கள் மங்கையர்ச்செல்வி, பாஸ்கர், ராமசந்திரன், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
மாதந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், 79,96,950 ரூபாய்,72 கிராம் தங்கம், ஒரு கிலோ 250 கிராம் வெள்ளி மற்றும் 222 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil