பரதநாட்டிய நடனக் கலைஞர் ஜாகீர் உசேனை கோயிலை விட்டு வெளியேற வற்புறுத்திய ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது, டிசம்பர் 10-ஆம் தேதி கோயிலுக்கு வந்த ஜாகீர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.ரங்கநாதர் மீது நம்பிக்கை கொண்ட ஹுசைன், பல முறை கோயிலுக்கு வழிபட வந்துள்ளார். கோயில் நிர்வாகம் வழக்கப்படி, ரங்கநாதரை நம்பினால், பிற மதத்தினர் கோயிலுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை.
அதே போல், இந்து பாரம்பரியம் முறையில் ஆடை அணிந்த யார் வேண்டுமானாலும், தெய்வகங்களுக்கு பிராத்தனை செய்யலாம்.பிரச்சனை மற்றும் அவப்பெயரை ஏற்படுத்த கோயில் நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக பொய்களைப் பரப்புவதை வழக்கமாகக் கொண்டவர் நரசிம்மன். அவர் மீது உடனடியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மாரிமுத்து அறிக்கை ஒன்றும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil