/tamil-ie/media/media_files/uploads/2018/04/NIRMALA-DEVI-CBCID.jpg)
நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரபரப்பு தீர்ப்பளித்தது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தனது கல்லூரி மாணவிகளிடம் தவறாக வழிநடத்தும் விதமாகப் பேசிய ஆடியோ 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற வழக்கில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் உலா வர தொடங்கின.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலமாக நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.
பின்னர், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு, நீண்ட நாள்கள் கழித்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அப்போது, இது தொடர்பாக எந்த பேட்டியும் வழங்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் உறுதி செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
மேலும், இந்த வழக்கில் தண்டனை குறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.30,2024) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு, அரசு தரப்பில், நிர்மலா தேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பகவதி அம்மாள், தண்டனை விவரத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
இதையடுத்து, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பு தீர்ப்பளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.