scorecardresearch

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி துவக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

11-ம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு ஜூன் 2-ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSLC exam, coronavirus, tamil nadu government, sslc public exam date announced
SSLC exam, coronavirus, tamil nadu government, sslc public exam date announced

SSLC Exam Time Table :  கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போல்டான பேச்சுக்கு பெயர் போனவங்க: இந்த முன்னணி நடிகை யாரு?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ், காரணமாக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியிருந்த நிலையில், இறுதி பாடத்தின் போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பலரும் தேர்வு எழுதவில்லை, என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அந்தப் படத்திற்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

SSLC Time Table, sslc public exam
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

இதற்கிடையே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் உயர்கல்வி, தொழிற்கல்வி  உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண், அடிப்படையாக இருக்கும் என்ற காரணத்தால், பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நாட்கள் கடந்து விட்டதாலும், கொரோனா கட்டுக்குள் வராததாலும், தேர்வு நடப்பது சந்தேகம் என்ற பேச்சும் எழுந்தது.

ஆகாயத்தில் பறக்கும் ரயில் கட்டணம்: கொரோனா காலத்தில் இப்படியா கசக்கிப் பிழிவீங்க..!

இதற்கிடையே பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தினார். இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி மொழிப் பாடமும், 3-ஆம் தேதி ஆங்கிலமும், 5-ஆம் தேதி கணிதமும், 6-ஆம் தேதி விருப்ப மொழி தேர்வும், 8-ம் தேதி அறிவியலும், 10-ஆம் தேதி சமூக அறிவியலும், 12-ஆம் தேதி வொக்கேஷனல் தேர்வும் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு 11-ம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு ஜூன் 2-ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை வேளையில் நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வின்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தேவையான விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sslc 10th class public exam time table announced by tn education minister sengottaiyan