போல்டான பேச்சுக்கு பெயர் போனவங்க: இந்த முன்னணி நடிகை யாரு?

அவரைப் போல பாதி இருந்தால் கூட, என்னை நான் சூப்பர் வுமனாக நினைத்துக் கொள்வேன்.

சினிமாவில் தனக்குக் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, தைரியமான பெண்ணாக திகழ்கிறார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். போல்டான பாத்திரங்களில் நடிக்கும் இவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். தப்பென மனதில் பட்டுவிட்டால், அது யாராக இருந்தாலும் வெளிப்படையாகக் கூறி விடுவார்.

ஆகாயத்தில் பறக்கும் ரயில் கட்டணம்: கொரோனா காலத்தில் இப்படியா கசக்கிப் பிழிவீங்க..!

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, அம்மாவுடன் இருக்கும் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு அவரது தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார் வரலக்‌ஷ்மி. படத்தைப் பார்க்கும் போது தான், அம்மா சாயா தேவியைப் போலவே வரலட்சுமி இருப்பது தெரிய வருகிறது.

Corona Updates Live : முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

“பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, இத்தனை தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று. அதற்கு பதில் என் தாயிடம் இருந்து தான். தனி ஆளாக எங்களை வளர்த்தார். அவர் ஒரு புலி. அந்த கடினமான சூழ்நிலையிலும் உதவி கேட்டு வருபவர்களுக்கும், விலங்குகளுக்கும் மறுக்காமல் உதவி செய்யும் மனம் படைத்தவர். அவரைப் போல பாதி இருந்தால் கூட, என்னை நான் சூப்பர் வுமனாக நினைத்துக் கொள்வேன். லவ் யூ மம்மி” என்று உணர்வுப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வரலட்சுமியின் இந்த சிறுவயது படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close