Covid-19 Cases Update : ஊரடங்கு முடிவுக்கு பின், அரசு பஸ்களை இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள், இன்று அறிவிக்க உள்ளனர். ஒரு பஸ்சில், 25 பேரை மட்டுமே ஏற்றுவது என்றும், அதில், 20 பேர், இருக்கையில் அமரவும், 5 பேர், நின்றபடி பயணிக்கவும் அனுமதிக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டுள்ளனர். வரும், 18ம் தேதி முதல், இது அமலுக்கு வரும் என, தெரிகிறது.
PM Modi Speech Live Updates: பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி
நாடு முழுதும் அமலில் உள்ள, கொரோனா ஊரடங்கு, வரும், 17ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மாநில அரசுகள், பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில், நேற்று முதல், 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் இருந்து, தொலைதுார ரயில்களின் இயக்கமும் துவங்கி உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்வதற்கு, சமச்சீரான செயல் திட்டத்தை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வைரஸ், நம் நாட்டின் கிராமப் பகுதிகளுக்கு பரவி விடாமல் இருப்பதை உறுதி செய்வதே, நம் முன் உள்ள மிகப் பெரிய சவால், என, அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி, இறப்பு விகிதத்தை குறைத்திருப்பது பாராட்டத் தக்கது,” என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு விசாரிக்கும்
நாளை மறுநாள் (மே.14 ஆம் தேதி) காணொலி மூலம் விசாரிக்கப்படும்
* தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினித் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் அடங்கிய முழு அமர்வு விசாரிக்கும்
தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு
* ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு (நிர்வாகம்) டி.எஸ்.பி-யாக சிவராஜன் உட்பட 10 பேர் பணியிடமாற்றம்
பிரதமர் மோடி உரையின் முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில், மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து, இன்று அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் திருவள்ளூரில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற பொது முடக்கம் என்பது உலக மக்கள் இதுவரை காணாதது.கொரோனா வைரஸில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற உலகமே இப்போது போராடி வருகிறது. கொரோனா வைரஸுடன் போராடி உயிர்களைக் காக்க வேண்டும். முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கொரோனா பரவலைத் தடுக்க அமலில் உள்ள பொது முடக்கம், வருகிற மே 17-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் இன்றும் மேலும் புதிதாக 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர்: நோயை அணைக்கட்டி தடுக்க முடியாது; அரசை குறைசொல்லும் நேரம் இதுவல்ல. மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என பேசுவதை தவிர்த்து அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், திருத்தணிகாசலத்தை வரும் 18 ஆம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைக்கு ஏற்கெனவே அறிக்கப்பட மே 14,16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளஹ்டால் ரயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை ராஜ்தானி குளிர்சாதன ரயில்மூலம் கொரோனா தொற்று வாய்ப்பு உள்ளதால் பயனிகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.சென்னை ரயில்களில் வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் டுவிட்டரில், “கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் திடீரென 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல.
மேலும், பெருந்தொற்று நோயால் அனைவரும் உளவியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இத்தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம்.
அதுவரை பொதுத் தேர்வினை தள்ளிவைத்துவிட்டு, நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பணிகளைச் செய்வதிலுமே அரசு எந்திரத்தின் முழுகவனமும் இப்போதைக்கு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 8340 பேருக்கு மேலும் ரூ.1000 நிவாரண உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்,மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த செயலி மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சைக்கு காணொலி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 153 ஆக அதிகரிப்பு
திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.
சென்னையில் 690 தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த தெருக்கள் 587 ஆக இருந்த நிலையில் தற்போது அதிகரிக்கும் தெருக்களோடு சேர்த்து மொத்தம் 690 தெருக்கள் கட்டுப்படுத்தப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல். கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் தேர்வை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெமசிவிர் ம்ருந்தை சோதனை முயற்சியாக வழங்க முடிவு.
சென்னை காவல் கூடுதல் ஆணையருக்கு கொரோனா பாதிப்பு. ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் கோயம்பேட்டில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக மனுத்தாக்கல் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . மன்மோகன் சிங் உடல்நிலை மருந்துகளுக்கு நன்கு ஒத்துழைத்து அவரது உடல்நலம் தேறி வருவதால், அவர் அடுத்த ஒரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஏர் இந்தியா நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வளாகம் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச செவிலியர் தினம் இன்று ( மே 12ம் தேதி) கொண்டாடப்படுவதையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, பஸ் வசதி இல்லாததால், 36,842 மாணவர்கள் எழுத இயலவில்லை. இவர்களுக்காக, இந்த தேர்வு, ஜூன் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது.
12ம் வகுப்புக்கான தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி, மே 27ம் தேதி துவங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 742 ஆக அதிகரித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலில், ராயபுரம் அதிக பாதிப்பு எண்ணிக்கைகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
கடலூருக்கு பயிற்சிக்கு வந்த 10 பெண் காவலர்கள் உள்ளிட்ட 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. பயிற்சியில் உள்ள 124 பெண்காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவையில் பணியாற்ற வாழ்த்துக்கள் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ், சர்வதேச நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா – 81795
பிரிட்டன் – 32065
இத்தாலி – 30739
ஸ்பெயின் – 26744
பிரான்ஸ் – 26643
பிரேசில் – 11653
ஈரான் -6685
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917லிருந்து 22,455ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206லிருந்து 2,293ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.