10,+1, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு… 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

+2 வகுப்பு பொதுத் தேர்வின் தேதி மற்றும் நேரத்தில் மாற்றம்

By: December 28, 2018, 9:15:05 AM

எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் நேரத்தில் மாற்றம் செய்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு அட்டவணை கடந்த ஜூனில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சில மாற்றங்களுடன் பொதுத் தேர்வு கால அட்டவணையை நாள் மற்றும் நேரம் வாரியாக தேர்வுத் துறை நேற்று வெளியிட்டது. இதுகுறித்த கூடுதல் விவரங் களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

+2 பொதுத்தேர்வு நேரம் மாற்றம்

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத் தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல், வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை :

எஸ்.எஸ்.எல்.சி / 10ம் வகுப்பு அட்டவணை:

மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை) – தமிழ் முதல் தாள்

18-ந்தேதி (திங்கட்கிழமை) – தமிழ் இரண்டாம் தாள்

20-ந்தேதி (புதன்கிழமை) – ஆங்கிலம் முதல் தாள்

22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் இரண்டாம் தாள்

23-ந்தேதி (சனிக்கிழமை) – விருப்ப மொழிப்பாடம்

25-ந்தேதி (திங்கட்கிழமை) – கணிதம்

27-ந்தேதி (புதன்கிழமை) – அறிவியல்

29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – சமூக அறிவியல்

தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும், மற்ற தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும்.

+1 / 11ம் வகுப்பு அட்டவணை :

மார்ச் 6-ந்தேதி (புதன்கிழமை) – தமிழ் (தமிழ்)

8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் (ஆங்கிலம்)

12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி) (கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங் (தொழிற்கல்வி)

14-ந்தேதி (வியாழக்கிழமை) – இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி (இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினஸ்ட் தேர்வு-1, எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-1, ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி)

18-ந்தேதி (திங்கட்கிழமை) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப் (உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெஷினிஸ்ட் தேர்வு-2, எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-2, மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் மற்றும் டெக்னிக்ஸ், மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ்)

20-ந்தேதி (புதன்கிழமை) – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் (வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் தேர்வு, புவியியல்)

22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்)

இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையில் நடைபெறும்.

+2 / 12ம் வகுப்பு அட்டவணை :

மார்ச் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – தமிழ்

5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – ஆங்கிலம்

7-ந்தேதி (வியாழக்கிழமை) – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)

11-ந்தேதி(திங்கட்கிழமை) – இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

13-ந்தேதி(புதன்கிழமை) – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

இந்த பாடங்களுக்கு புதிய முறைப்படி வழக்கம்போல் தேர்வு எழுதுபவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும், ஏற்கனவே இந்த பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய முறைப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும்(தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர) தேர்வு நடைபெறும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sslc 11th and 12th board exam time table released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X