சென்னை சென்ட்ரலில் ரயிலில் வரும் பார்ச்சல்கள் மாயமாவதாக திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முறைக்கேட்டில் ஈடுப்பட்ட 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரயிலில் வரும் பார்ச்சல்கள்:
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி 30 பார்சல்கள் மேற்கு வங்க மாநிலம், ஹவுராவுக்கு அனுப்ப, முன்பதிவு செய்து அனுப்பப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 11 பார்சல்கள் மட்டும் பார்சல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி அலுவலகத்தில் தனியாக இருந்துள்ளது. இந்த பார்சல்களை எடுத்து சோதித்த போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன.
தனியாக இருந்த 11 பார்சல்கள் தான் ஹவுராவுக்கு அனுப்பப்பட்டது என அலுவலகத்தில் தகவல் பதிவாகியிருந்தது. எனவே அனுப்பப்பட்டதாக பதிவில் உள்ள பார்சல்கள், ஏன் இங்கிருக்கிறது என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
இதனால், அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் இடையே கடுமையான பிரச்னை ஏற்பட்டது.ஆய்வு செய்த அதிகாரி, பார்சல் குளறுபடி குறித்து, உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் வருவதற்கு பார்சல்கள் இருந்த இடத்தில் இருந்து மாயமாகின. உயர் அதிகாரிகளிடம் சிக்கிவிடுவோம் என, பயந்த ஊழியர்கள், பார்சலை மறைத்து விட்டு, முறையாக அனுப்பி விட்டோம் என சாதித்ததாக மற்ற அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் 5 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுக்குறித்து விளக்கம் அளித்த பார்சல் கண்காணிப்பு உயர் குழு அதிகாரிகள், இந்த பிரச்னை குறித்து, துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றனர்.
மாயமாகும் பார்சல்கள்:
பார்சல்கள் அடிக்கடி மாயமாவது குறித்து சமீபகாலமாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி, மதுரையை சேர்ந்த ஒருவர், டெல்லியில் இருந்து 2 பார்சல்களில் 5 டிவிக்களை வாங்கி வைத்து மதுரைக்கு அனுப்பினார்.
இந்த 2 பார்சலில் 1 பார்சல் மட்டுமே வந்து சேர்ந்தது மற்றொரு பார்சலின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதைக்குறித்து புகார் அளிக்க சென்னை வந்த அந்த நபர், பார்சல் துறையிடன் இதுக்குறித்து புகார் அளித்தார்.
டெல்லியில் இருந்து, சென்னை சென்ட்ரல் வந்த பார்சல், எழும்பூருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில், மதுரைக்கு அனுப்பப்பட்டு விட்டது என, பார்சல் அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு, தற்போது வரை பார்சல் சென்று சேரவில்லை.இப்படி சமீபகாலமாக பார்சல் முறைகேடு குறித்து புகார்கள் அதிகரித்துள்ளன.