/indian-express-tamil/media/media_files/64U8WseriJtFmBGYsLl1.jpg)
வெற்றி துரைசாமியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் – எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயப்பூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 12, 2024
சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு… pic.twitter.com/mTkNkNGUuk
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, 8 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். சைதை துரைசாமி தன் மகனை இழந்தது, அவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். சைதை துரைசாமியின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் இரங்கல் செய்தி. pic.twitter.com/w9iwpxhNUv
— AIADMK (@AIADMKOfficial) February 12, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.