/tamil-ie/media/media_files/uploads/2023/08/news-reporter.jpeg)
தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் சாலை விபத்தில் மரணம்; முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதையும் படியுங்கள்: 5,000 விவசாய மின் இணைப்புகளை மாற்றியமைக்க ஒப்புதல்; தமிழக அரசு அரசாணை
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-24-at-13.43.01.jpeg)
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-24-at-13.43.00.jpeg)
இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கும், தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.