சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங் பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார் இதனைத் தொடர்ந்து வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜி மனைவி கூடுதல் மனு தாக்கல்: அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு
சமூக நீதிக்காக, காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தை உருவாக்கியதற்காக, சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலைய முனையத்துக்கு மறைந்த முதல்வர் சி.என். அண்ணாதுரை மற்றும் உள்நாட்டு விமான நிலைய முனையத்துக்கு மறைந்த முதல்வர் கே.காமராஜர் பெயர் சூட்டியதற்காக, “தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில்” சென்னையில் வி.பி.சிங்கின் சிலை நிறுவப்படும் என ஏப்ரலில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது சிலை நிறுவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வி.பி.சிங் பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார், இடஒதுக்கீடு நமது உரிமை என்பதை வலியுறுத்த அனைவரையும் தைரியப்படுத்தினார்.
திரு வி.பி.சிங்கின் மரபு, எங்கள் தலைவர் தலைவர் கலைஞரின் எண்ணத்துடன் பின்னிப் பிணைந்திருந்தது, ஏனெனில் அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கும் பொதுவான இலக்கைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவரது எண்ணங்கள் ஒளிமயமான மற்றும் சமமான எதிர்காலத்தை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil