/indian-express-tamil/media/media_files/2025/04/13/RMT29liIfSz5LEIRnee0.jpg)
Today Latest Live News Update in Tamil 27 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Jul 27, 2025 21:32 IST
மோடி வருகைக்குப் பிறகு அரியலூர் மையப்புள்ளியாக மாறும்: அண்ணாமலை நம்பிக்கை
தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி, 1000 ஆண்டுகளுக்கு முந்தைய நமது கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துரைத்தார் என்றும், அவரது வருகைக்குப் பிறகு அரியலூர் ஒரு மையப்புள்ளியாக மாறும் என்றும் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை வரவேற்று அண்ணாமலை பேசுகையில், "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது கலாச்சாரம் எப்படி இருந்தது என்று பிரதமர் மோடி எடுத்துக்கூறினார். பிரதமர் வந்த பிறகு அரியலூர் மையப்புள்ளியாக மாறும்" என்று குறிப்பிட்டார்.
- Jul 27, 2025 21:30 IST
2000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - நகராட்சி நிர்வாகத்துறை
நகராட்சி நிர்வாகத் துறையில் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நாளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பல்வேறு காரணங்களால் இந்த நிகழ்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
- Jul 27, 2025 20:34 IST
ஓடும் ரயிலில் 14 சவரன் நகை பறிப்பு; கொள்ளையன் தாகியதில் பெண் காயம்
அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டி 14 சவரன் நகைகள் பறித்துவிட்டு கொள்ளையன் ஏரியில் குதித்து தப்பி ஓடினார். கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.
- Jul 27, 2025 20:32 IST
ஆடிப் பூரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, நாளை (ஜூலை 28, 2025, திங்கட்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சனிக்கிழமை அன்று வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- Jul 27, 2025 19:46 IST
உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன் - வீடு திரும்பிய ஸ்டாலின் முதல் பதிவு
அப்பல்லோவில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் முதல் பதிவு: “நலம்பெற்று வீடு திரும்பினேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்!
உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
- Jul 27, 2025 19:33 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 88,000 கன அடியில் இருந்த நீர்வரத்து 98,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
- Jul 27, 2025 19:33 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 88,000 கன அடியில் இருந்த நீர்வரத்து 98,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
- Jul 27, 2025 18:48 IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் ஆர்பரித்து ஓடுகிறது.
- Jul 27, 2025 18:16 IST
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்போலோமருத்துவமனையில்இருந்துஸ்டாலின்டிஸ்சார்ஜ்ஆனார். 3 நாட்களுக்குப்பிறகுவழக்கமானபணிகளைத்தொடரமருத்துவர்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில்இருந்துபுறப்பட்டமுதலமைச்சருக்குவழிநெடுகதிமுகதொண்டர்கள்வாழ்த்துதெரிவித்தனர்.
- Jul 27, 2025 17:58 IST
கோவில்பட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே வெங்கடேஸ்வரபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (வயது 44). விவசாயியான இவர் கோவில்பட்டியில் உரம் வாங்கிவிட்டு டிராக்டருடன் கூடிய டிரைலரில் ஊருக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தார். ஆட்டுப் பண்ணை அருகே சென்றபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
- Jul 27, 2025 17:43 IST
மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தற்போது 75,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 18,000 கன அடியும், 16 மதகு கண் வழியாக 82,000 கன அடியும் நீர் வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் நீர்வளத்துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
- Jul 27, 2025 17:41 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
இன்று மதியம் வினாடிக்கு 78,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, தற்போது 88,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதிக நீர்வரத்தின் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலனை கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 17:14 IST
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 75,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக் கூடும் எனவும் 1 லட்சம் கனஅடி வரை திறந்து விடப்படலாம் என மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 17:12 IST
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெரு பகுதியில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. இந்நிலையில், இன்று காலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் தெரிவித்து தொடர்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் மோப்ப நாய் உத்தமன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு நீலாங்கரை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு நடிகர் விஜய் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். வீட்டின் பல பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர். இச்சோதனையில், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசாருக்கு தெரியவந்தது.
- Jul 27, 2025 17:11 IST
12,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்ய TCS திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான TCS, நடப்பு நிதியாண்டில் 12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. Al பயன்பாடு, பணியாளர்கள் திறன் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2% ஊழியர்களை நீக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் CEO க்ரித்திவாசன் கூறியுள்ளார்
- Jul 27, 2025 16:55 IST
சென்னை-மும்பை ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைப்பு
செப் 8 முதல் சென்னை எழும்பூர்- மும்பை (22158) ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 இனைத்து இயக்கப்பட உள்ளது. ஒரு 3-வது ஏ.சி.பெட்டி. ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மற்றாக 2 பொதுப்பெட்டிகள் இணைத்து இயக்கம். செப் 5 முதல் சென்னை – மும்பை (22159) ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 இனைத்து இயக்கப்பட உள்ளது. செப் 6 முதல் சென்னை எழும்பூர் – சேலம் (22154) ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டி இனத்து இயக்கப்பட உள்ளது.
- Jul 27, 2025 16:49 IST
6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Jul 27, 2025 16:48 IST
கேரளா: 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவின் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி கண்ணூர், காசர்கோடு ஆகிய இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 16:16 IST
வார விடுமுறை: திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்
வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- Jul 27, 2025 16:07 IST
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: 30 பேர் மீது வழக்கு
பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து களங்கம் ஏற்படும் வகையில் ஒன்றுகூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட 30 பேர் மீது 189(2) 126(2) ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 16:05 IST
'அப்போலோ தரத்திற்கு அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும்'
தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சைகோடியில் வாடிக்கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஆதங்கம். புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்ட போதுகூட அதை அரசாங்க மருத்துவமனைக்கு சென்றுதான் நான் போட்டுக்கொண்டேன். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை என்றுதான் எனது ஆதங்கம் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
- Jul 27, 2025 15:32 IST
மாலை 6.15 மணிக்கு வீடு திரும்பும் ஸ்டாலின்
சிகிச்சை முடிந்து இன்று மாலை 6.15 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- Jul 27, 2025 14:44 IST
ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித் தேரோட்டம்
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- Jul 27, 2025 14:17 IST
நெசவாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், இன்று (ஜூலை 27) காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது, நெசவாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
- Jul 27, 2025 11:58 IST
திருச்சியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியிலிருந்து விமான நிலையம் வரை 8 கி.மீ தூரத்திற்கு பிரதமர் ரோடு ஷோ நடத்தப்பட உள்ள நிலையில், ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமரை வரவேற்க சாலைகளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
- Jul 27, 2025 11:57 IST
கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
கேரளாவில் தொடரும் கனமழை, இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு,
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட்டில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - Jul 27, 2025 11:56 IST
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஒரே நபரா? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- Jul 27, 2025 11:55 IST
ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் என பலர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - Jul 27, 2025 11:53 IST
என்.டி.ஏ. ஒரு ஆபத்தான கூட்டணி: பண்ருட்டி ராமச்சந்திரன்
பா.ஜ.க கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காது; ஓ.பி.எஸ்-க்கு நன்மை இல்லை.. வெளியே வந்துவிட்டால் நிம்மதி தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேற வேண்டும், ஓ.பி.எஸ்.ஐ பாஜக புறக்கணிக்கிறது, அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியள்ளார்.
- Jul 27, 2025 11:51 IST
‘அடங்காதே’ திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியீடு
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், சுரபி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அடங்காதே’ திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
- Jul 27, 2025 11:50 IST
மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா: பிரதமருக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி
அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் - Jul 27, 2025 09:57 IST
நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி
நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.
- Jul 27, 2025 09:44 IST
உதகை முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்
உதகை முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று மூடப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழையால், அதிக மரங்கள் கொண்ட பைன் பாரஸ்ட், ட்ரீ பார்க் மற்றும் தொட்டபெட்டா காட்சி முனை ஆகிய இடங்களில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
- Jul 27, 2025 09:24 IST
தேசிய ஜனநாயக கூட்டணி வலுபெற்று வருகிறது - அண்ணாமலை
அன்புமணியும், ஐயாவும் இணைந்து பாஜக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வலுபெற்று வருகிறது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
- Jul 27, 2025 09:16 IST
ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தற்போது விநாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் நீர் வரத்து 15,000 கன அடி அதிகரித்துள்ளது.
- Jul 27, 2025 09:15 IST
காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகள்
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 60,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோரிக்கையின்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 NDFR குழுக்கள் புறப்படுகின்றன. திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 09:14 IST
பவானி ஆற்றில் வெள்ள அபாயம் எச்சரிக்கை
பவானி ஆற்றில் வெள்ள அபாயம் காரணமாக கொடிவேரி அணையில் பொதுமக்களுக்கு தடை மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என நீர்வளத்துறை தகவல். பவானி ஆற்றில் குளிக்க, மீன் பிடிக்க, பரிசல் இயக்கவும் தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது
- Jul 27, 2025 08:47 IST
பட்டாசு வெடித்து போட்டதில் சிறுமி முகம் சிதைவு
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், இறுதி ஊர்வலத்தில் அலட்சியமாக பட்டாசுகளை தூக்கி வீசியதில், சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியின் முகம் சிதைந்தது. வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33) என்பவரை போலீசார் கைது செய்து, வினித் (24) என்பவரை தேடி வருகின்றனர்.
- Jul 27, 2025 08:22 IST
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
ஈரோடு ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாகேந்திரன் (55), தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட மனைவி சுஜிதா (45) மற்றும் மனநலன் பாதிக்கப்பட்ட மகள் தான்ய லட்சுமி (20) ஆகிய மூவரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
- Jul 27, 2025 08:21 IST
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்த நபர். முதல்வரின் வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தபின் புரளி என தெரிய்வந்தது.
- Jul 27, 2025 07:57 IST
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
- Jul 27, 2025 07:26 IST
சட்டவிரோதமாக இந்தியா வந்த இலங்கை நபர்
சென்னை செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகர் பகுதியில், உரிய ஆவணங்கள் இன்றி பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக அவர் இந்தியா வந்திருப்பது தெரியவந்த நிலையில், விசாரணைக்குப் பிறகு அவரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- Jul 27, 2025 07:25 IST
கோவை பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறப்பு
நடப்பாண்டில் 4 ஆவது முறையாக நிரம்பிய கோவை பில்லூர் அணையில் இருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 07:24 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Jul 27, 2025 07:23 IST
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு, 55.93% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 6.579 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.