அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். யாரை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார் என்ற தகவலும் தங்களுக்கு தெரியும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க-வின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
அவர் பேசும் போது, "இருமொழிக் கொள்கை குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறிய கருத்துகளோடு தமிழ்நாடு அரசு முழுமையாக உடன்படுகிறது. தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. நமது வழிக் கொள்கையும் அது தான் என்பதை கூறிக் கொள்கிறேன்.
இந்தக் கொள்கையை விட்டு விலக மாட்டோம். இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் தாய்மொழியை காப்போம் என்று உறுதியாக இருக்கிறோம். ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். இது பணப்பிரச்சனை இல்லை; நம் இனப்பிரச்சனை.
நிதி தரவில்லை என்பதற்காக இன மானத்தை அடமானம் வைக்கும் கொத்தடிமை அல்ல நாங்கள். அண்ணா முதலமைச்சராக இருந்த போது இருமொழி கொள்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு அண்ணா அளித்த மாபெரும் கொடை. இது தமிழ்நாட்டை பொறுத்த வரை சட்டம். அண்ணா உருவாக்கிய சட்டம் தான் இது.
இந்தக் கொள்கை தான் தமிழ்நாட்டை அரை நூற்றாண்டு காலமாக உயர்த்தியது. எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாங்கள். தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதனை அனுமதிக்க மாட்டோம். இதில் எங்கள் நிலைப்பாடு சரி என பல மாநிலங்கள் உணர்ந்து வருவதை நாங்கள் பார்க்கிறோம்.
இந்தி மொழி திணிப்பு என்பது பண்பாட்டு அழிப்பு ஆகும். இதன் மூலம் மாநில மொழி மற்றும் இனம் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்க சரியான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இன்று காலை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் இந்த நேரத்தில், அவர் யாரை சந்திக்கிறார் என்ற செய்தியும் எங்களுக்கு வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்த வேண்டுகோளை அவர் முன்வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
எதிர்க் கட்சி துணை தலைவர்கள் பேசுகின்ற போது, இந்த விஷயத்தில் உடன் நிற்போம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.
டெல்லியில் யாருடன் சந்திப்பு? இ.பி.எஸ் விசிட் பற்றி பேரவையில் பேசிய ஸ்டாலின்
இன்று (மார்ச் 25) டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு யாரை சந்திக்கிறார் என்று தனக்கு தெரியும் எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு வேண்டுகோள் ஒன்றையும் முன் வைத்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் அவர் உரையாற்றினார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.